உறவுக்காக ஏங்கினேன்
உண்மையை தொலைத்தேன்
உணர்வுகளை மறைத்தேன்
என் தேடலுக்கு விடையாய்
வாழ்க்கைக்கு துணையாய்
அன்பின் வெளிப்பாடாய்
வந்தாய் என் வாழ்வில்
மனதின் சூன்யந்தை போக்கினாய்
துன்பத்தின் பாரத்தை குறைத்தாய்
என் பலத்தை எனக்கு உணர்த்தினாய்
மீண்டும் குழந்தையானேன்
மீளா மகிழ்ச்சியில் திளைத்தேன்
தாயிற்கு பின தாரத்தின் அன்பினிலே....